![]() |
| சாந்த சொருபீயாக,புலி வாகனத்தில்... |
மேலும் காலம் ஆக ஆக அய்யபனது புகழ் விஸ்வ ரூபம் எடுக்கத் தொடங்கியது.தற்போது மேற்கு வங்காளம்,பீகார்,ஒரிசா,ம பி,யு பி மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஐயப்பனை தரிசிக்க படையெடுத்து வருகின்றனர்.இப்படி புகழ்,மக்கள் கூட்டம் என அதிகரித்த ஐயப்பன் கோவில் அதன் மூலம் பெரிதும் ஆனது.ஐயப்பனை வருடம் முழுவதும் தரிசிக்கலாம் என்றாலும்,விரதமிருந்து மாலையிட்டு தரிசிக்க செல்ல கார்த்திகை மாதமே மிகவும் சிறந்த மாதமாகும்.இம்மாதத்தில் தான் அனைவரும் கூட்டம் கூட்டமாக சென்று தரிசிப்பர்.சாதரணமாக தரிசிக்க முடியாது.நாற்பது நாட்கள் விரதமிருந்து,இருமுடி கட்டி செல்ல வேண்டும்.ஐயப்பனை தரிசிக்க சிலபல விதிமுறைகள் உண்டு.மாலையணிந்து விரதமிருப்போர் காலில் செருப்பணிய கூடாது,இரவில் வெறும் தரையில்தான் உறங்க வேண்டும்,தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும்,விரதமிருக்கும் நாட்களில் பெண்களை மனதால் கூட நினைக்க கூடாது,அதாவது பிரம்மச்சரியம் கடைபிடித்தால்,கெட்ட வார்த்தைகளை பேசுவது கூடாது,தீய பழக்கங்களை செய்யக் கூடாது என்பது போன்று பல கட்டுபாடுகள் உண்டு.இந்த கட்டுபாடுகள் அனைத்திற்கும் காரணமும் உண்டு.ஐயப்பனை தரிசிக்க செல்லும் உங்கள் உடலினையும்,மனதினையும் உறுதி செய்யவே இத்தகைய கட்டுபாடுகள்.உடல்,மன கட்டுப்பாடுகள் உள்ளவர்கள் மட்டுமே ஐயனை தரிசிக்க முடியும்.
![]() |
| பம்பை ஆறு |
ஆனால் இன்றைய உண்மை நிலை என்ன?.நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் தெரியும்.இல்லையென்றால் சும்மாவேனும் டாஸ்மாக் பாருக்கு சென்று பாருங்கள்.''சாமிக்கு தனி கிளாஸ் குடு'' என்ற சத்தம் ஒலிக்காத பார் தமிழ்நாட்டில் எங்கு தேடினாலும் கிடைக்காது.தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மறைந்து பய உணர்வு மறைந்து சாமிகள் அனைவரும் வெளிப்படையாக அனைத்தையும் செய்கிறார்கள்.இப்போதெல்லாம் மாலை போடுவது என்பது பாஷன் ஆகி விட்டது.ஜீன்ஸ் அணிவது போல்,புதிதாக வரும் ஸ்டைல் கலை பின்பற்றுவது போல்.எல்லோரும் மாலை போடுகிறார்கள்,நானும் விட்டேனா பார் என்று கண்ட ஜென்மங்கள் எல்லாம் மாலை அணிந்து தெருவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இவர்கள் மாலை அணிந்த தோற்றத்துடனேயே பீடி,சிகரெட்,பாக்கு,மது என்று எல்லா வித போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி,உண்மையான அய்யப்ப பக்தர்களையும் சேர்த்து அவமதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.இவர்களுக்கு மாலை போடுவது என்பது ஒரு பொழுதுபோக்கு,ஸ்டைல்....இப்படிப்பட்ட ஜன்மங்களை எல்லாம் ஐயப்பனின் வாகனமான புலியை விட்டு கடிக்க செய்ய வேண்டும்.அய்யப்ப மாலை அணிவதே அணைத்து விதமான கேட்ட பழக்கங்களையும் கைவிட்டு திருந்துவதற்கு,அப்படி இருக்கும் போது எந்த வித மன உறுதியுமே இல்லாத இந்த நபர்கள் ஏன் மாலை அணிந்து அவர்கள் பேரையும்,ஐயப்பன் பேரையும்,உண்மையான பக்தர்கள் பேரையும் கெடுக்க வேண்டும்.கெட்ட பழக்கங்களை விட மன உடல் உறுதி இல்லாதவர்களான இவர்கள்,மாலை அணிந்தால் மட்டும் அய்யப்பனகாவே மாறியா விடப் போகிறார்கள்?.மாலை போட்டாலும் அணைத்து கெட்ட பழக்க வழக்கங்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.முதலில் மாலை அணிந்திருக்கும் போது பீடியையே ஒளிந்து ஒளிந்து பிடித்து கொண்டிருந்தவர்கள் காலம் செல்ல செல்ல பகலிலேயே பாரில் ஸ்பெசல் டம்ளரில் சரக்கை ராவாக அடித்து கொண்டிருக்கிறார்கள்.இன்னும் அதற்கும் ஒரு படி மேலே போய் பெண்களை அரவனைப்பவர்களும் உண்டு.அந்த சமயத்தில் மட்டும் மாலையை கழற்றி விட்டு தப்பை செய்து முடித்த பின்,இம்மாதிரி தப்பை செயபவர்களுக்கேன்றே உருவாக்கப்பட்ட வாக்கியமான ''அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் செய்த தவறை மறந்து மன்னித்து விடு ஸ்வாமியே'' என்றதை ஒரு தடவை ஓதி விட்டு மறுபடியும் மாலையை அணிந்து கொள்கிறார்கள்.இப்போது கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் நடந்து வருவதால் எங்கெங்கு காணினும் அய்யப்ப சாமியடா என்பது போல் எல்லா பாருக்குள்ளும் கூட சாமியடா என்றும் சொல்லலாம்.குடிப்பதே மது.......இதில் தனி ஸ்பெசல் கிளாஸ் '''தூத் தேறி'' .....
மாலையையும் போட்டு கொண்டு இந்த கருமங்களையும் தொடர்ந்து செய்வதற்கு பதில்...மாலை அணியாமலே இருந்து விடலாம்..மாலை அணிவதால் மட்டும் என்ன புண்ணியம் இவர்களுக்கு கிடைத்து விடப் போகிறது...இவர்கள் எல்லாம் ஐயப்பன் சந்நிதானத்தில் உள்ள பதினெட்டு படி ஏறவே தகுதி இல்லாதவர்கள்.இவர்கள் செய்யும் இந்த காரியத்தால் அனைத்து அய்யப்ப பக்தர்களுக்கும் அவபெயரை உண்டாக்குகிறார்கள் இந்த கழிசடைகள்..பலர் மாலை போட்டு கொண்டு இவைகளை செய்வதை ஒரு பெருமையாகவே நினைக்கிறார்கள்.அனைவரின் முன்பும் மாலை அணிந்த தோற்றத்துடன் பாரில் அமர்ந்து சரக்கடித்து கொண்டும்,பேசக் கூடாதவைகளை பேசிக்கொண்டும்,செய்யக் கூடாதவைகளை செய்து கொண்டும்
இருக்கும் இவர்களால் அய்யப்பனுக்கு என்ன லாபம்?.மேலும் பலர் எப்படா சபரிமலைக்கு போயிட்டு வந்து மாலைய கழட்டீட்டு தண்ணி அடிப்போம் என்று ஐயனை தரிசிப்பதை விட பிராந்தியை தரிசிப்பதற்கு ஆவலாய் இருப்பார்கள்.
எதற்கு இவர்கள் வெட்டி பந்தாவுக்காக மாலை அணிந்து தேவையில்லாமல் காசை செலவு செய்து சபரிமலை சென்று கொண்டு?அதற்க்கு பேசாமல் இங்கேயே எப்போதும் போல் ஜாலியாக சரக்கடித்துக் கொண்டும்,ஊர் சுற்றிக் கொண்டும் இருக்கலாமே?.இம்மாதிரி ஆட்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது.மேலும் கோவிலிலும் கூட்டமாவது குறையும்.உண்மையான பக்தர்கள் நிம்மதியாக நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வார்கள்.கன்னி சாமிகள் வரத்து குறையும்.அய்யப்பனும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார் அல்லவா?.அய்யப்பனிடமும் இந்த மாதிரி போலி பக்தர்கள் அதிகரித்திருப்பது வேதனைக்குரியது.மேலும் இது ஐயப்பனுக்கும்,சபரி மலைக்குமே மிகப் பெரியதொரு அவமானமாகும்.இந்த கடவுள் இப்படித்தான்,இவருக்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு,என்று இருக்கும் போது அவைகளை எதையுமே மதிக்காமல் கோவிலுக்கு மட்டும் வருவேன் என்றால் அப்புறம் எதற்கு கட்டுப்பாடு,விதி முறைகள்,சடங்குகள்.பேசாமல் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டு அப்படியே கோவிலையும் இழுத்து மூடி விட்டு போய் விடலாம்.இப்படி பட்ட போலி பக்தர்கள் பெருகி வரும் இந்த வேலையில்,இதை இப்படியே விட்டால் நாளை ஐயப்பனுக்கும் ஒரு கட்டிங் ஏற்றி விட்டு ''வ குவாட்டர் கட்டிங்'' படத்திற்கு இரண்டாம் ஆட்டத்திற்கு அழைத்து போவார்கள் இந்த புண்ணிய வான்கள்.
இதை இப்படியே விட்டு விட்டால் நாளை அய்யப்ப பக்தர்கள் என்றாலே காறித்துப்பும் நிலை ஏற்பட்டு விடும்,அய்யப்ப மாலை அணிந்தோர் என்றாலே அவர்கள் விரதமிருந்து மாலை அணிந்திருக்கும் போதே தண்ணி அடிப்பவர்கள்,அனைத்து விதமான கெட்ட காரியங்களையும் செய்பவர்கள் என்றாகி விடும்.ஆகவே அரசாங்கமோ அல்லது கோவில் நிர்வாகத்தரோ இதற்கு ஏதேனும் ஒரு வழியை கண்டு பிடித்து அனைத்து உண்மையான அய்யப்ப பக்தர்கள் மனதிலும் பாலை வார்ப்பார்களாக.....இதை நிறைவேற்றுவோருக்கு ஐயப்பனின் ஆசீர்வாதமும்,மற்றும் பக்தர்களின் ஆதரவும் பெருக வேண்டுமென உண்மையான அய்யப்ப பக்தர்களின் சார்பிலும்,மாலை அணிந்திருக்கும் என் நண்பர்கள் கேட்டு கொண்டதற்கினங்கவும் இதை எழுதுகிறேன்...
![]() |
| பதினெட்டு படி |




