அனைவருக்கும் வணக்கம்,
இவ்வுலகத்தின் பேரில் கொண்ட அன்பினாலும் மதிப்பினாலும்,மனித நேயம் என்றும் மறக்க கூடாதென்றும் கூறுவதே என் கடமை.மக்களின் மனதில் அன்பையும் பண்பையும் வளர்ப்பதே என் பணி.எந்நாளும் நாம்,நாம் கொண்ட கடமையை மறக்க கூடாது.உங்கள் கடமை என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அது போக்குவரத்து விதிகளை மதிப்பதாக இருக்கலாம்,அல்லது பெற்றோரை காப்பதாக இருக்கலாம்,அல்லது சட்ட ஒழுங்கிற்கு உட்பட்டு நடப்பதாக இருக்கலாம்.மொத்தத்தில் மனிதனாக இருக்க வேண்டும்.அனைவரும் கேட்கலாம்.நீ என்ன ஒழுக்கமா என்று?.ஒழுக்கமாக நடக்க நினைப்பதால் தான் இந்த பதிவு.அவரவர் தங்கள் பணியை சரிவர செய்தாலே போதும்,வேறொன்றும் வேண்டாம் உலகம் சிறக்க.தங்கள் பணியை செய்வதற்கே காசு கேட்கும் ஆட்கள் உள்ள இந்த உலகத்தில்,எதையும் எதிர் பாராமல் வேலை செய்வோரை ஊக்கபடுத்துங்கள்.அதுவே தங்களின் மிக சிறந்த பணியாகும்.எக்காலத்திலும் லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் என்று உறதி செய்யுங்கள்.வரும் இளைய தலைமுறையிடம் ஊழல்,லஞ்சம் போன்றவை இல்லாதபடி ஆக்குவோம்.இதுவே நம் கடமையாக இருக்கட்டும்.
நமது தலைமுறைக்காக நாம் சுத்தமான உலகை விட்டு செல்வோம்.இல்லையேல் அவர்கள் நம்மை காரி துப்பும் நிலைமை வரும்.வருங்காலம் கணிக்க முடியாதது.ஆகவே நாம் முதலில் நம்மை சுத்தபடுத்துவோம்.நம்மால் முடிந்த அளவிற்கு தவறுகள் இல்லா உலகை நம் சந்ததியினர்க்கு அளிப்போம்.
நன்றி,விரைவில் புதிய பதிவுகளுடன் சந்திப்பேன்.
உங்கள் நண்பன் வேல்........
No comments:
Post a Comment