இருக்கிறது.முதலில் அம்பானியை பார்ப்போம்.இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி தனது காதல் மனைவி திருமதி நீதா அமபானிக்கு காதல் பரிசாக தருவதற்கு ஒரு பெரிய காதல் கோட்டையை மும்பை மாநகரில் கட்டியுள்ளார்.அதன் பெயர் அன்டிலியா.4532 சதுர அடியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 27 மாடிகளுடன் அமைந்துள்ளது.160 கார்களை நிறுத்தும் வசதி படைத்த பெரிய தளம்,3 ஹெலிகாப்டர்களை மாடியில் நிறுத்த வசதியாக ஹெலிபேட்,தனியாக வாகனங்களை பராமரிப்பதற்கென்றே ஒரு தளம்,9 எலிவேட்டர்கள்,நீச்சல் குளங்கள்,மூன்றாம் மாடியில் 50 பேர் அமர்ந்து பார்க்கும் பெரிய திரையரங்கம்,யோகாசன மையம்,உடற்பயிற்சி நிலையம்,மூன்று மாடிகளில் தொங்கும் தோட்டம்,பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தை போல,மற்றும் முழுவதும் பனிக்கட்டிகளால் ஆன ஒரு தளம்,இதில் நுழைந்தால் நீங்கள் இமயத்திலோ அல்லது ஆல்ப்ஸ் மலையிலோ பனியில் இருப்பது போல் உணர்வீர்கள்.இப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மாளிகையை திரு முகேஷ் அம்பானி அவர்கள் மும்பையில் எழுப்பியுள்ளார்.இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 8000 கோடி ஆகும்.இம்மாளிகையில் முகேஷ் அம்பானி அவரது மனைவி மற்றும் இரு மகன்கள்,ஒரு மகள் என மொத்தம் ஐந்தே பேர் மட்டும் வசிக்க போகிறார்கள்.இந்த வீட்டில் பணி புரிய மட்டுமே அறுநூறு பேர் தேவைப்படுவார்கள்.ஐந்து பேர் வசிக்க இப்படி ஒரு குபேர அரண்மனை!.
![]() |
| முகேஷ் அம்பானியின் அன்டிலியா மாளிகை |
அதாவது எண்ணில் சொன்னால் 70,69488 ...!
நம் தமிழ்நாட்டு மின்சாரத்தை எல்லாம் எடுத்து உபயோகப்படுத்தியிருப்பாரோ என்று என்ன வைக்கக் கூடிய அளவிற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் மின்சாரத்தை.இந்த தொகை நம் சாதாரண தமிழ்நாட்டு குடுமகனிடம் இருந்திருந்தால் அதை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து வாழ் நாள் முழுவதும் சாப்பிடுவார்கள்..
![]() |
| சினேகா மற்றும் அவரது இடுப்பை கிள்ளிய வாலிபர்(தாடியுடன் இருப்பவர்) |
தனது இடுப்பை கிள்ளிய அந்த வாலிபரை அவர் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வெறும் திட்டியதோடு காவல் துறையிடம் புகார் அளிக்காமல் விட்டு விட்டார்.இந்த சம்பவம் படத்துடன் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.அதில் சினேகா மற்றும் அவர் இடுப்பை கிள்ளிய தாடிக்கார வாலிபருடன் கோபமாக பேசுவது போல் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.அதில் சினேகாவின் இடுப்பை கிள்ளிய அந்த நபர்,சினேகா திட்டுவதை கேட்டு கொண்டு சிரித்து கொண்டுள்ளார்.அவர் அதை பெரிதாவே எடுத்து கொள்ளவில்லை போலிருக்கிறது.இந்த சம்பவமும் நடிகை சிநேகாவிற்கு புதிய விஷயம் அல்ல.ஏற்கனவே திருச்சியில் துணிக் கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது இதே போல் அவரது இடுப்பு கிள்ளப் பட்டது.புன்னகை இளவரசி சிநேகாவிற்கு மட்டும்தான் இதுபோல நடக்கிறது என்றெண்ணி விடாதீர்கள்.நமது நாளைய நம்பிக்கை நட்சத்திரம்,மானையும் மயிலையும் ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் நமீதா மற்றும் அங்காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலி ஆகியோருக்கும் வேறு பல நடிகைகளுக்கும் இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளன.
நமது நாட்டில் வேலை வாய்ப்பின்மை,விலைவாசி உயர்வு,அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம்,லஞ்ச லாவண்யம்,ஊழல்,கொலை,கொள்ளை,தொடர் மின்வெட்டு போன்ற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில் நமது வாலிபர்களுக்கு நடிகைகளின் அங்கங்களை கிள்ளுவதும்,உரசுவதும்,கனவுலகில் அவர்களுடன் சல்லாபிப்பதும்தான் தற்போதைய முக்கிய பிரச்சினை போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.அப்துல் கலாம் கனவு காணுங்கள்,கனவு காணுங்கள் என்று அடிக்கடிசொல்வதை இவர்களை போல இளைஞர்கள் தவறாக எண்ணி விடுகிறார்களோ என்னவோ?.அற்ப கிளுகிளுப்பிற்கு ஆசைப்பட்டு கொண்டு ஏன்தான் இதுபோல் தவறான பாதையில் செல்கிறார்களோ.இவர்களை போன்றவர்களின் மனம் முழுவதும் அசின்,த்ரிஷா,ஷ்ரேயா,நமீதாக்களால் நிரம்பபட்டுள்ளது.அதனால் தான் இவ்வாறு நடிகைகளின் மேல் ஆசைப்பட்டு,அவர்களால் கவரப்பட்டு தங்கள் சுய கௌரவத்தை இழந்து அனைவர் முன்னும் தலை குனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை.
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் சினிமாவினால் மிக மோசமான ஒரு வழியில் சென்று கொண்டிருக்கின்றனர்.இன்றைக்கு வெளி வரும் பாதி திரைப்படங்கள் இளைஞர்களை தவறான பாதையை நோக்கி செலுத்தி கொண்டிருக்கிறது.படங்களில் வரும் கதாநாயகர்கள் அனைவருமே வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டும்,சரக்கடிதுக் கொண்டும்,பள்ளிக்கு செல்லும் சிறு பெண்களை காதலித்துக் கொண்டும்,தாய் தந்தை பேச்சை கேட்காமல் ஊர் மேய்ந்து கொண்டும் உள்ளதாகவே காட்டுகிறார்கள்.இதனை பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் இவைகளை பதிய வைப்பதன் மூலம் ஒரு இளம் தலைமுறையே கெட்டு குட்டி சுவராக சீரழிந்து வருகிறது.அவனவன் இன்றைக்கு கம்ப்யூட்டர்,சாப்ட்வேர்,அமெரிக்கா,ஐரோப்பா,
மாதம் ஒரு லட்சம்,இரண்டு லட்சம் என காலில் ரெக்கை கட்டியது போல் ஓடி கொண்டிருக்க,இவர்களை போன்றவர்களோ சினேகாவின் இடுப்பு கிள்ளுவதற்கு உகந்ததா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும் தற்போதைய படங்களில் பெண்களை கரெக்ட் செய்வது எப்படி,பரிட்சையில் பிட் அடிப்பது எப்படி,பெற்றோரை சுலபமாக ஏமாற்றுவது எப்படி,குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி மேலும் இவளை எப்படி கூட்டிக் கொண்டு ஓட வேண்டும்,அடுத்தவன் மனை கவர்வது.....என்று அனைத்தையும் கற்றுத தருகிறார்கள்.மேலும் சினிமா போதாதென்று இப்போது சின்னத்திரையும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை மாக்களாகி வருகிறது.
இவைகளை பார்த்து கெட்டு அழிந்து மனம் சீரழிந்தவன் சினேகா இடுப்பை கிள்ளாமல்,தமிழ்நாட்டு தண்ணீர் தட்டுபாட்டயா தீர்த்து விட போகிறான்.சிலர் சொல்லலாம்,நடிகைகள் ஏன் அவ்வாறு தங்கள் உணர்ச்சிகளை தூண்டுவது போல் பொது இடங்களுக்கு வர வேண்டும்.அப்படி வந்தால் அப்படித்தான் கிள்ளுவோம் என்று.எங்கள் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டு பின்பு குய்யோ முறையோ என்றால் என்ன செய்வது என்றும் சொல்கிறார்கள்.ஒழுக்கமாக படித்து முடித்து ஒழுங்கான வேலைக்கு சென்றிருந்தால்,பெண்களின் பாகங்களை ஏன் தடவிக் கொண்டிருக்க போகிறீர்கள்.ஒரு வேலையும் இல்லாது வெட்டி வேலையை மட்டுமே கொண்டிருக்கும் காரணத்தால் தானே இம்மாதிரி வேலைகளுக்கு மனது அலைகிறது.நடிக,நடிகையர் வரும் இடங்களுக்கு சென்று அவர்களை வாயில் ஈ போவது கூட தெரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டு,பொழுதை போக்கி கொண்டு இருப்பவர்கள் இடுப்பை கிள்ளாமல்,அடுப்பை பற்ற வைத்து சமையலா செய்ய முடியும்.அதே போல் செய்வதையும் செய்து விட்டு அவர்கள் பார்பதற்கு கவர்ச்சியாக இருந்தார்கள்,உணர்ச்சிகளை தூண்டினார்கள்,மனதை சஞ்சலப் படுத்தினார்கள் என்று மொக்கை காரணம் கூறுபவர்களுக்கு......இதெல்லாம் நீங்கள் செய்யவில்லை,நீங்கள் பேசவில்லை....நீங்கள் இத்தனை நாள் பார்த்த சினிமா,டிவி போன்றவைகள்தான் செய்ய வைத்துள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக அவைகள் உங்கள் மனதில் ஊடுருவி விஷ விதைகளை தூவி தூபமிட்டு சமய சந்தர்பம் வைக்கும் போது உங்களை அத்தகைய காரியங்களில் ஈடுபட வைத்துள்ளது.அவைகள்தான் உங்கள் உணர்ச்சிகளை தூண்டி விட்டுள்ளது,அவைகள்தான் உங்களை செயலில் இறங்கவைக்கிறது.ஆகவே செய்வதையும் செய்து விட்டு மற்றவர்களின்மேல் பலியை போட வேண்டாம்.தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக அந்தப் படங்களில் வன்முறை,கட்டவிழ்த்த கவர்ச்சி,ஆபாசம்,பாலியல் செய்கைகள் போன்றவற்றை உங்கள் மேல் திணித்து ரசிக்க வைத்து லாபம் அடைகின்றனர்.சாதாரண ரசிகனும் அவைகளை பார்த்து பார்த்து மனதில் ஏற்றி சமயம் வரும் போது செயலில் நிறைவேற்றுகின்றான்.
இதுவே நீங்கள் நன்கு படித்து நல்ல வேலையில் இருந்தால் இந்த மாதிரி வேலைகளுக்கு ஏது நேரம்.உங்கள் வேலையை கவனிக்கவே நேரம் இல்லாத போது,சினேகா,நமீதாவையா போய் பார்த்து கொண்டிருப்பீர்கள்.ஒன்றும் இல்லாமல் சும்மா இருக்கும் போதுதான் இம்மாதிரி வேளைகளில் மனம் ஈடுபடும்.
முகேஷ் அம்பானி அவர்கள் இம்மாதிரி சிறு பிள்ளை விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தால் சுமார் எட்டாயிரம் கோடியில் வீட்டை கட்டியிருக்க முடியுமா?அவர் அவ்வளவு தொகையில் ஐந்தே பேர் வசிக்க பெரிய அரண்மனையை கட்டி குடி புகுந்து கொண்டிருக்கும் வேளையில்,நமது ஆட்களோ இங்கு சினேகாவின் இடுப்பில் குடி புகுந்து கொண்டிருக்கிறார்கள்.மகாத்மா காந்தி,நேரு,காமராஜர்,சுபாஷ் சந்திர போஸ்,ராஜாஜி,பகத் சிங்,திருப்பூர் கோடி காத்த குமரன்,பாலா கங்காதர திலகர் போன்ற தலைவர்கள் இம்மாதிரி சில்மிச வேளைகளில் ஈடுபட்டிருந்தால் சுதந்திரம் எனும் சொல்லை நாம் அப்துல் கலாமின் கனவுகளில் மட்டுமே காண வேண்டியிருக்கும்.இந்த சில்லறை வேலைகளை செய்ய போயிருந்தால் முகேஷ் அம்பானி இன்று அவர் அரண்மனை கட்டியிருக்கும் அதே மும்பையில் குடிசை வாசியாகதான் இருந்திருப்பார்.அவர் தந்தை பெரிய கோடீஸ்வரர் அதனால் அவரும் பெரிய பணக்காரர் என்றால்,அவர் தந்தை சேர்த்து வைத்ததை ஊதாரித்தனமாக செலவழிக்காமல் கட்டி காத்து அதை மென் மேலும் பெருக்கி,இன்று அதை மாபெரும் மூலதனமாக்கி காட்டியுள்ளார்.அவர் இதை போல வேளைகளில் ஈடுபட்டிருந்தால் எவ்வளவு செல்வம் இருந்தும் என்ன பயன்?அது வேட்டியாகதான் போயிருக்கும்.....அதை போலவே இடுப்பை கிள்ளுபவர்கள்,முதலில் சுய கட்டு பாடு,தனி மனித ஒழுக்கம் இல்லாமல் பணம் சம்பாதித்து என்ன பயன்?
கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னதை நடிகைகளுடன் சல்லாபிப்பதாக கனவு காணும் இத்தகைய நபர்கள்,கலாம் காணச் சொன்ன கனவு நம்முடைய எதிர்காலத்தை பற்றி,வாழ்க்கையை பற்றி என்று அறியாத இவர்கள்,என்ன அறிவுரை சொன்னாலும்,எப்படி வாய் கிழிய பேசினாலும்,எத்தனை பெரியார்கள் வந்தாலும்,...............................மேலும் அடுத்தது யாருடைய இடுப்பு,த்ரிஷா இடுப்பா?தமன்னா இடுப்பா? இல்லை நயன்தாரா இடுப்பா? என்று தான் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.


No comments:
Post a Comment